Tuesday, February 14, 2017

ஊழல் பிறவிகளின் "கைத்தடிகளை " அரியணையில் வைத்து...

தெய்வப் பிறவிகளின்
"பாதுகைகளை "
அரியணையில் வைத்து
ஆட்சிபுரிந்த வரலாறுகள்
நம்மிடையே உண்டு

ஊழல் பிறவிகளின்
"கைத்தடிகளை "
அரியணையில் வைத்து
ஆட்சிப்புரிந்த வரலாறுகள்
நம்மிடை இருந்ததில்லை

விஷம்
நெருப்பு
பகை
இவைமட்டுமல்ல

ஊழலின் எச்சங்களையும்
மிச்சம் வைத்தால்
தொடரவைத்தால்
நிச்சயம் மீண்டும்
தன் குணம் காட்டவே செய்யும்

கட்சியைக் கூட
சகித்துத் தொலைக்கலாம்
குடும்ப ஆக்கிரமிப்பை  ?
.......................................

இனியேனும்
 மக்கள் பிரதி நிதிகள்
மக்களின் எண்ணங்களை
பிரதிபலித்தலே
நாட்டுக்கு மட்டுமல்ல
அவர்களுக்கும் நல்லது

பார்ப்போம் ...

3 comments:

ஸ்ரீராம். said...

//ஊழல் பிறவிகளின்
"கைத்தடிகளை "
அரியணையில் வைத்து
ஆட்சிப்புரிந்த வரலாறுகள்
நம்மிடை இருந்ததில்லை//

ஏன் இல்லை? லாலு - ராஃப்ரி! இங்குமே முன்னர் பன்னீர்! ஆனால் குடும்ப ஆதிக்கம் என்றுமே ஆபத்து. இனியாவது வாக்களிப்பதில் கவனம் செலுத்துவோம். அப்போதும் வாக்காளர்களாகிய நாம் பாவம்தான்! இங்கு யாருக்குத்தான் வாக்களிப்பது!

திண்டுக்கல் தனபாலன் said...

பார்ப்போம் ஐயா...

G.M Balasubramaniam said...

அதற்கு இன்னும் நாலு ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டுமே

Post a Comment