Saturday, January 7, 2017

உள்ளும் புறமும் அவரவர் அளவுக்கு

என் நண்பன் தன் மகனை
குச்சியால் விளாசிக்கொண்டிருந்தான்
தடுத்து நிறுத்திக்  காரணம் கேட்டேன்

"எத்தனைமுறை சொல்லியபோதும்
கேட்காது தொடர்ந்து
பக்கத்து பையனிடம்
பேனா பென்சில்
திருடிக்கொண்டு வருகிறான்
நான் அவனுக்குத்
தேவைப்பட்டதையெல்லாம்
ஆபீஸில் இருந்து கொண்டு வந்தும்
இவனுக்கு எதுக்கு இந்த
திருட்டு புத்தி " என்றான்

கூடியிருந்த பக்தர்களை நோக்கி
கைகளை மிக உயர்த்தி
"கதவுகளைத் திறவுங்கள்
காற்று வரட்டும் "என்றார்
காவியில் இருந்த இளைய துறவி

தனித்து ஆசிரமத்திருக்கையில்
கதவருகில் இருந்த
ஆத்ம சீடனை நோக்கி
"கதவை மூடிப் போ
அவள் மட்டும் இருக்கட்டும்"ஏன்றார்
ஜாலியில் இருந்த அதே துறவி

தமிழர்களின்
பண்பாடு குறித்து
கலாச்சார பெருமை குறித்து
கோடை மழையென
மேடையில்
கொட்டித் தீர்த்தார்
மக்கள் தலைவர்

கேட்டுக்கொண்டிருந்த
மக்கள் மட்டுமல்ல
முன் வரிசையில் அமர்ந்திருந்த
தலைவரின்
மூன்று மனைவியர் மட்டுமின்றி
அவரது வாரீசுகளும்
வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தனர்

பசி எனச் சொன்னால்
யானைப்பசியும்
பூனைப்பசியும் ஒன்றுதான்
ஆனால்
அளவும் ஐயிட்டமும் மட்டும்தான்
கொஞ்சம் கூடுதல் குறைச்சல்

7 comments:

தி.தமிழ் இளங்கோ said...

முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளவர்கள் பற்றி அருமையாகச் சொன்னீர்கள்.

G.M Balasubramaniam said...

அன்று படித்தபோது இருந்த உணர்வே இப்போதும் நடைமுறை நிகழ்வுகள் அருமை

வெங்கட் நாகராஜ் said...

அருமை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

உள்ளும் புறமும் அவரவர் அளவுக்கு மிகச்சரியாகவே எடுத்துரைத்துப் புரிய வைத்துள்ளீர்கள். :)

’உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்’ என யாரோ, என்றோ, எதற்காகவோ, யாருக்காகவோ, யாரிடமோ கேட்டது நினைவுக்கு வருகிறது.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை
தம +1

நிஷா said...

அடடா> அனேகர் இப்படித்தான்.முரண்பாடுகளை குத்தகைக்கு எடுத்திருப்பார்கள் . சில நேரமும் நாமும் தான்.

Thulasidharan V Thillaiakathu said...

அருமை! உள்ளொன்று புறமொன்று

Post a Comment