Tuesday, May 10, 2016

தேர்தல்---வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க எளிதான வழிமுறை

உள்ளதில்
நல்லதாக நான்கு ஐந்தைத்
தேர்ந்தெடுத்து வைத்து
பின் அவைகளில்
ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் முறை
ஜவுளிக்கும் நகைக்கும்தான்
சரிப்பட்டு வரும்

ஏனெனில்
கடையில் நம் பார்வைக்கு
வைக்கப்பட்டுள்ள எல்லாமே
நல்லவையே சிறந்தவையே

வேட்பாளர் தேர்வுக்கு
இந்த முறை சரிப்பட்டு வராது

வேட்பாளர்களில்
மிக மோசமானவரை முதலிலும்
அடுத்து மோசமானவரை அடுத்து எனவும்
வரிசையாக கழிக்கக்
கடைசியில் மிஞ்சும்
சுமார் மோசமானவரையே
நாம் தேர்ந்தெடுக்கவேண்டும்

ஏனெனில்
தேர்தலில் போட்டியிடுபவர்கள்
யாராகிலும் எந்த விதத்திலாவது
குறையுடனிருக்கவே
நிச்சயம் சாத்தியம்

ஏனெனில் ஜனநாயக அமைப்பு  அப்படி ?

இதில் நல்லவர்களைத்
தேர்வு செய்யும் வாய்ப்பை விட
சுமார் மோசமானவர்களைத் தேர்ந்தெடுக்கவே
நமக்கு வாய்ப்பு அதிகம்

ஏனெனில் நம் ஊரின் நிலைமை அப்படி

மே 16 இல்

இயன்றவரை வேட்பாளரைச் சரியாக நிறுத்து

தவறாது ஓட்டளித்து ஜனநாயகம் காப்போம்

15 comments:

ஸ்ரீராம். said...

தவறாது வாக்களிக்க வற்புறுத்துகிறீர்கள்! ஓகே! ஆனால் நகைச்சுவையாகச் சொல்ல வேண்டும் என்றால் சுமாரான மோசமான ஆட்களுக்கு வாக்களித்து அவர்களை அடுத்த தேர்தலுக்குள் கொஞ்சம் அதிக மோசமான ஆளாக்குவது நம் கடமை!

:)))

Unknown said...

கெட்டதில் நல்லதை தேர்ந்தெடுக்கவா.? என்ன கொடுமை சார் இது!

Yaathoramani.blogspot.com said...

ரொம்பக் கெட்டதில்
கொஞ்சம் கெட்டது
நல்லதுதான் இல்லையா ?

Anonymous said...

தற்பொழுது இருக்கும் அரசியல் கட்டமைப்பில் ,
தொகுதியில் வெற்றி பெரும் வேட்பாளர் அவர் என்ன தான்
படித்தவராக இருப்பினும், எந்தத் துறையில் வல்லுவனராக இருப்பினும்,

தமது கருத்துக்களை அவையில் சுதந்திரமாக எடுத்துக்கூற
கட்சி அனுமதிப்பதில்லை.

இரண்டாவது, கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரே அவையில் கட்சி சார்பில் பேசிட இயலும். கட்சி என்ன சொல்லுகிறதோ, அவரிடம் எப்படி பெசவேண்டுமெனச் சொல்லப்பட்டு இருக்கிறதோ அது போல் தான் செயல்படவேண்டும்.

அமெரிக்கா வில் யூ.எஸ். ஏ . யில் இருப்பது போன்று பை பார்டிசன் முறையில் அவையில் விவாதங்களோ, ஒட்டுகளோ போடப்படுவது இல்லை.

ஆக, வேட்பாளர் நல்லவரா, கெட்டவரா என்று பார்ப்பத்தில் அதிக பொருள் இல்லை.

நல்லவர் என்றால், நாலு வார்த்தை நல்லவிதமாக பேசுவார். அவ்வளவே. அவர் வீட்டுக்குச் சென்றால் இளநீர், காபி தருவார், இதமாக பேசுவார், ஆறுதல் வார்த்தைகள் சொல்வார், சொல்வதைக் கேட்டுக்கொள்வார்.

நல்லவர் என்றால் கட்சி முடிவு தனக்குச் சரியில்லை என்றால் வாளா இருப்பார்.

கட்சித் தலைமையை எதிர்த்து இப்போதைய அரசியலில் இங்கு மட்டும் அல்ல, இந்தியாவின் எந்த அவையிலும் யாரும் எதுவும் செய்ய இயலாது.

sury siva said...

bhura tho doondne main gaya, bhura to mila na koyee
jo dil doonda apan ko, mujse bhura naa koyee

கெட்டவனைத் தேடித் புறப்பட்டேன். கெட்டவன் யாருமே எனக்குக் கிடைக்கவில்லை.
என் உள்ளத்தினுள்ளே தேடினேன்.என்னைவிட
கெட்டவன் யாருமில்லை

கபீர் சொன்னாரு இல்ல ரஹீம் சொனாறு.

லோகத்திலே கெட்டவன் , நல்லவன் அப்படின்னு யாரும் கிடையாது.
எல்லாம் நம்ம பார்க்கிற கோணத்திலே தான் இருக்கு.

பிரபாகர் முராரி வர்றதுக்கு முன்னாடி ஓடிப்போயிடரென்.

சுப்பு தாத்தா.

Nagendra Bharathi said...

அருமையான யோசனை. நன்றி

G.M Balasubramaniam said...

என்னதான் நல்லவராக இருந்தாலும் அவரை நிறுத்தும் அமைப்பின் கீழேதான் பணி ஆற்ற வேண்டும் ஆகவே தனிமனிதரைத் தேர்ந்தெடுப்பதை விடா இருப்பதி நல்ல மோசமான அமைப்புக்கே வாக்களிப்பது சரியாகும் மேலும் ஒருவரை நல்லவர் கெட்டவர் என்று தீர்மானிப்பது எப்படி நமக்கு வேட்பாளரைப்பற்றி என்ன தெரியும் ?

சிவகுமாரன் said...
This comment has been removed by the author.
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளை சொன்ன விதம் நன்று

சிவகுமாரன் said...

அனானிமஸின் கருத்துக்கள் முற்றிலும் உண்மை.
ரமணி சார்,
எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளியைத் தேர்ந்தெடுங்கள் என்கிறீர்களா?
ஏன் யாருமே NOTA பற்றி பேசவில்லை?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தவறாது ஓட்டளிப்போம்.

G.M Balasubramaniam said...

@ சிவகுமாரன்
நோட்டாவுக்கு ஓட்டளித்து அதுவே முதல் இடம் பெற்றாலும் அடுத்து வருபவர் தேர்வாகி விடுவாராம்

Unknown said...

உங்கள் கருத்தே என் கருத்தாகும் !

வெங்கட் நாகராஜ் said...

கெட்டவரில் குறைந்த அளவு கெட்டவர் - நம் தேசத்தின் நிலை இப்படி ஆகிவிட்டதே.....

”தளிர் சுரேஷ்” said...

நல்ல வழிமுறை சொல்லிக் கொடுத்துள்ளீர்கள்! பின்பற்றி பார்க்கிறேன்!

Post a Comment