Saturday, November 14, 2015

மீட்பின்றி சபிக்கப்பட்ட" நடுத்தரங்களாய் "

ஊழல் பெருச்சாளிகளுக்கும்
உதவாக்கரை தலைவர்களுக்கு மிடையில்
ஈட்டி ஏந்திய கோழைகளாய்
வெறும் வாக்காளிக்கும் எந்திரங்களாய்

புரட்டு மதவாதிகளுக்கும்
முரட்டு பகுத்தறிவாளருக்கு மிடையில்
சுழலில் மாட்டிய படகுகளாய்
இரு தலைக் கொல்லி எறும்புகளாய்....

திமிங்கல  நிறுவனங்களுக்கும்
உள்நாட்டு  முதலைகளுக்கு மிடையில்
தீயில் உருகும் மெழுகாய்
ஏழ்மையில் கரையும் உயிரினங்களாய்.

சிகரத்தைப் பார்த்து ஏங்கியபடி
பாதாளம் பார்த்துப் பயந்தபடி
சரிவினில் தொங்கிடும் ஜந்துக்களாய்
இலக்கற்றுத் திரியும் விலங்கினங்களாய்..

பல்லாண்டு அலைந்து திரிகிறோம்
நல்லதொரு மேய்ப்பனைத் தேடி
தீராத பாவப்பட்ட ஜென்மங்களாய்
மீட்பின்றி சபிக்கப்பட்ட" நடுத்தரங்களாய் "

11 comments:

அருணா செல்வம் said...

நடுத்தரங்கள்..... கவிதை அருமை இரமணி ஐயா.

இது நீங்கள் படைத்ததில் உங்களுக்குப் பிடித்தது.
எனக்கு உங்கள் படைப்புகள் அனைத்தும் பிடிக்கும்.

Anbarasan said...

sir ithu verum kavithai nu solla mudiyaathu. miga nutpamaana sinthanai....

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை... உண்மைகள் ஐயா...

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை ஐயா
உண்மை
தம 1

மீரா செல்வக்குமார் said...

ஒரு கவிதை வாசித்த நினைவு..

மரங்கள் தங்களுக்குள்
முணுமுணுத்துக்கொண்டன.
எங்களிலிருந்து
எத்தனை சிலுவைகள்
தயாரிக்கும் உங்களால்
ஏன் ஒரு இயேசுவைத்
தயாரிக்க
முடியவில்லை.

Swathi said...

வாழ்த்துக்கள்
http://swthiumkavithaium.blogspot.com/

”தளிர் சுரேஷ்” said...

அருமை! நடுத்தரங்களின் நிலையை நன்றாக சொன்னீர்கள்!

வெங்கட் நாகராஜ் said...

அருமை.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள். த.ம6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

நிஷா said...

நடுத்தர வர்க்கத்தி தேவையும் தேடலும்....
நல்லதொரு மேய்ப்பனைத் தேடியது எனும் நிஜம் சுடுகின்றது. அருமை.

SOMASUNDARAM APPOOTHY said...

துறைதோறும் துறைதோறும் ஊடுறுவி, சிதறடித்து, சீரழிக்கும் தற்காலச் சூழலைத் தாங்கொணாது, உள்ளப்பண்பால் உயர்ந்தவர்களது நெஞ்சங்களில் எழுந்து உயர்ந்து, சீறும் சிந்தனை அலைகளின் ஓசை, இரமணியின் கவிதையில் எதிரொலிக்கிறது.
சோ.அப்பூதி

Post a Comment