Wednesday, September 30, 2015

ஆலையில்லா ஊரில்...

அவசரத்தில் போகிற போக்கில்
எதிர்படும் நண்பனை
விசாரித்துப்போகும் "மினிச் சுகத்தை "
"டுவீட்டுகளிலும்

அவசியமாக தவிர்க்க முடியாது
காத்திருக்கும் தருணங்களில்
சந்தித்த நண்பனுடன்
உரையாடும் "தனிச் சுகத்தை "
"முக நூலிலும் "

விடுமுறை நாட்களில்
ஊர்க்கோடி பாலத்தில் அமர்ந்து
சாவகாசமாகப் பேசும் "அற்புதச் சுகத்தை"
"பதிவுப் பக்கங்களிலும் "

அனுபவித்தபடி என்னை நான்
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்

என்ன செய்வது
கடமைச் சுமை அழுத்த
கூன் விழுந்த மனத்துடன்
கட்டிடக்  காட்டுக்குள் வசிப்பவன்
முழு நிலவின் அழகையும்
மனதைக் குளிர் விக்கும்
அந்தப் பனிப் பொழிவையும்
குளிரூட்டப்பட்ட திரையரங்குகளில்
கண்டு  தானே
" மெய்மறக்க  " முடியும் ?

6 comments:

சென்னை பித்தன் said...

எனக்கு ஊர்க்கோடிப் பாலம்தான் பிடித்திருக்கிறது ரமணி!அதுவே திருப்தி தருகிறது
த ம 2

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அருமை ஐயா..

கோமதி அரசு said...

ஊர்க்கோடி பாலத்தில் அமர்ந்து
சாவகாசமாகப் பேசும் "அற்புதச் சுகத்தை"
"பதிவுப் பக்கங்களிலும் "//

அருமை.

Unknown said...

பின்னிரண்டும் என் முதுமைக்கு வழித்துணையே! இரமணி!

Anonymous said...

கடமைச் சுமை அழுத்த
கூன் விழுந்த மனத்துடன்
கட்டிடக் காட்டுக்குள் வசிப்பவன்//
satiyaana sat.i...

வெங்கட் நாகராஜ் said...

ஊர்க்கோடிப் பாலத்தில் அமர்ந்து பேசுவதில் கிடைக்கும் இன்பம் தான் எனக்கும் பிடித்திருக்கிறது.....

நல்ல சிந்தனை. ரசித்தேன் ஜி!

Post a Comment