Monday, October 27, 2014

"ன்"னை "ம் "ஆக்குவோம்

கூட்டம்
சங்கம்
தீர்மானம்
இயக்கம்
ஆர்ப்பாட்டம்
போராட்டம்

கூட்டாக இருந்தால் ஒழிய
மேற்குறித்த எவையும்
வெற்றி கொள்ள வாய்ப்பேயில்லை

"நா " வைத் தொடர்ந்து
"ன் "இருக்கும்வரை
"நா " வைத் தொடர்ந்து
"ம் " மட்டுமே தொடராதவரை

மேற்குறித்த ஐந்தும்
உறுதிபட வழியுமில்லை
வெற்றி கொள்ள வாய்ப்பும்
நிச்சயம் இல்லவே இல்லை

எனவே எப்போதும்
"நா "விற்குபின் ஒட்டி உறவாடி
நம் ஒற்றுமையைக் கலைக்கும்
"ன்"னை ஒழிக்கப் பயில்வோம்
"நா"விற்குப் பின் எப்போதும்
"ம்"இருக்க முயற்சி செய்வோம்

14 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

இரசிக்கவைக்கும் கவிதை ஐயா சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
த.ம2

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மதுரை விழாவில் தங்களைக் கண்டதில் மகிழ்ச்சி. விழாவில் பல நண்பர்களை நேரில் பார்க்க முடிந்தது மனதிற்கு நிறைவைத் தந்தது. வலையுலக நட்பைத் தொடர்வோம். வாழ்த்துக்கள்.

Avargal Unmaigal said...

இது என்ன உள்குத்து கவிதையா?

Unknown said...

கவிதை அருமை இரமணி! மிகவும் சரியான கருத்து! பொதுவாக , செயல் எதுவானாலும் ,தலைமை ஏற்று நடத்துகின்றவர் ,நான் என்ற தன்முனைப்பு உள்ளவராக இருந்தால் அச்செயல் எதிர் பார்த்த அளவு வெற்றி பெறுவதில்லை! எனவே , நாம் என்ற உணர்வோடு அனைவரையும்
அரவணைத்து செயல் படுவதே நன்று! இது பொது வாழ்வில் நான் பெற்ற அனுபவம்

சரணாகதி. said...

//"நா"விற்குப் பின் எப்போதும்
"ம்"இருக்க முயற்சி செய்வோம்//

அருமையாகச்சொல்லி இருக்கீங்க.

Unknown said...

இதைதான் ,தீது'ம் ' நன்று'ம் ' பிறர்தர வாரா இரண்டு 'ம்' போட்டுச் சொல்கிறதே:)
த ம +1

Yarlpavanan said...

சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

Anonymous said...

ஆம்
சரி......யே.....
வேதா. இலங்காதிலகம்.

Iniya said...

சரியாக சொன்னீர்கள் உண்மை உண்மை !முயற்சி செய்வோம்.

வெங்கட் நாகராஜ் said...

நாம் என்ற உணர்வோடு சேர்ந்து செயல்படுவோம்....

சிறப்பான கருத்து சொல்லும் கவிதை.

த.ம. +1

Thulasidharan V Thillaiakathu said...


எனவே எப்போதும்
"நா "விற்குபின் ஒட்டி உறவாடி
நம் ஒற்றுமையைக் கலைக்கும்
"ன்"னை ஒழிக்கப் பயில்வோம்
"நா"விற்குப் பின் எப்போதும்
"ம்"இருக்க முயற்சி செய்வோம்//

என்பதைச் சொல்லிச் சென்றவிதம் மிக அருமை!

தினேஷ்குமார் said...

நல்லது ஐயா...

நா உற்ற ன அற்று
நா இனிக்க ம் பற்று

சசிகலா said...

ஆஹா அருமையாக சொன்னீர்கள் ஐயா. நான் என்பது அகந்தை அதனை நாமாக மாற்றி ஆனந்தம் பெறுவோம் என்பதை அழகாக சொல்லிய விதம் சிறப்பு.

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான கருத்துள்ள கவிதை! வாழ்த்துக்கள்!

Post a Comment