Sunday, October 26, 2014

கணியனும் கணினியும்....

அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும்
முதல் எழுத்துச் சம்பந்தமன்றி
வேறேதும் சம்பந்தமில்லை என்பது
எனக்கும் உடன்பாடுதான்

ஆயினும்
கணியன் பூங்குன்றனாருக்கும் கணினிக்கும்
முதல் இரண்டெழுத்து மட்டுமே சம்பந்தம்
என ஏனோ ஏற்றுக் கொள்ளமுடியவில்லை

ஏனெனில்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
எனக் கவிதையாக கணியன் சொல்லிப் போனதை

கணினி தானே  மிக எளிதாய்
இன்று சாத்தியமாக்கிப் போகிறது ?

(வலைப்பதிவர் ஆண்டுவிழாவில் சுற்றத்தார்போல
சொந்தம் கொண்டாடிய பதிவர்களை நினைக்கப்
பிறந்த எண்ணம் )

11 comments:

வெங்கட் நாகராஜ் said...

அருமை ரமணி ஜி.....

விழா சிறப்பாக நடந்தேறியது தெரிந்து மகிழ்ச்சி.

vimalanperali said...

விழா சிறந்தது குறித்து மகிழ்ச்சி/

Yarlpavanan said...

தங்கள் எண்ணம் உண்மையின் வெளிப்பாடு
தங்கள் பதிவின் ஊடாக
பதிவர் சந்திப்பின் வெற்றியைக் காண்கிறேன்.

Unknown said...

நீண்ட நாட்களுக்கு பின் பதிவர்கள் பல பேரை சந்திக்க முடிந்ததில் நானும் மிகவும் மகிழ்ந்தேன் !
த ம 3

அப்பாதுரை said...

brilliant!

மன்னிக்கவும் - இதற்கான சரியான தமிழ்ச் சொல் தோன்றவில்லை.

கோமதி அரசு said...

மிக சரியாக சொன்னீர்கள்.
பதிவர் சந்திப்பு சிறப்பாக நடந்த உற்சாகத்தில் வந்த கவிதை அருமை.

KILLERGEE Devakottai said...

பதிவர்கள் பல பேரை சந்திக்க முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ந்தேன்

”தளிர் சுரேஷ்” said...

அருமையான உவமை! நன்றி! இந்த முறை கலந்து கொள்ள முடியவில்லை! உங்களை சந்திக்க முடியவில்லை! வருத்தமாகத்தான் உள்ளது!

சிவகுமாரன் said...

பொருத்தமான கவிதை. தங்களை சந்திக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பதிவர்கள் பலரை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி. தங்கள் கவிதையைக் கண்டதில் அதைவிட மகிழ்ச்சி.

Thulasidharan V Thillaiakathu said...

மிக மிக அருமையான பதிவு! நல்ல புத்துக் கூர்மையான உவமை! ரசித்தோம்!

Post a Comment