Wednesday, July 11, 2012

இது போதும்


நிலையான உறவுக்கும்
நெருக்கமான நட்புக்கும்
பின்னிப்பிணைந்த நெருக்கமும்
மூச்சுவிடாத பேச்சும்
நிச்சயம் தேவையில்லை என்பதும்
இதழ் விரித்த சிறு புன்னகையும்
மனம் திறந்த ஒரு சொல்லும்
போதும் என்பது கூட
உறவும் நட்பும்
உருக்குலைந்த பின்புதான்
புரிந்து தொலைக்கிறது

உறுதியான உறுப்புக்கும்
பலமான உடலுக்கும்
அண்டாச் சோறும்
அடுக்குக் குழம்பும்
அவசியம் தேவையில்லை என்பதும்
சரிவிகித சிற்றுண்டியும்
சத்துள்ள பழவகையும்
போதுமென்பது கூட
குடலும் உடலும்
கெட்டுத் தொலைந்த பின்புதான்
புத்திக்குப் புரிகிறது

ஆனந்த வாழ்வுக்கும்
அமைதியான மனதிற்கும்
வங்கிக் கணக்கில் இருப்பும்
வகைதொகையில்லாச் சொத்தும்
என்றேன்றும் தேவையில்லை என்பதும்
போதுமென்ற மனமும்
ஆரோக்கிய உடலும்
போதுமென்பது கூட
ஏழை எளியவர்களின்
முகம் பார்த்தபின்புதான்
மூளைக்கு உறைக்கிறது

கவிதை சிறக்கவும்
காலம் வெல்லவும்
வார்த்தை ஜாலங்களோ
பாண்டித்திய மாயங்களோ
அவசியத்  தேவையில்லை என்பதும்
எளிமையான சொற்களும்
வலுவான நோக்கமுமே
பிரதான மென்பது கூட
ஔவையையும் பாரதியையும்
படித்தறிந்த பின்புதான்
புரியவே துவங்குகிறது




60 comments:

ராமலக்ஷ்மி said...

/எளிமையான சொற்களும்
வலுவான நோக்கமுமே
பிரதான மென்பது கூட
ஔவையையும் பாரதியையும்
படித்தறிந்த பின்புதான்
புரியவே துவங்குகிறது/

அருமை.

பால கணேஷ் said...

ஆஹா... ரமணி ஸாரின் கருத்துப் பெட்டகத்தில் இருந்து மற்றொரு மணம் வீசும் மலர். அருமை.

CS. Mohan Kumar said...

//கவிதை சிறக்கவும்
காலம் வெல்லவும்

எளிமையான சொற்களும்
வலுவான நோக்கமுமே
பிரதான மென்பது கூட
ஔவையையும் பாரதியையும்
படித்தறிந்த பின்புதான்
புரியவே துவங்குகிறது//

Nice

சசிகலா said...

இதழ் விரித்த சிறு புன்னகையும்
மனம் திறந்த ஒரு சொல்லும்
போதும் என்பது கூட
உறவும் நட்பும்
உருக்குலைந்த பின்புதான்
புரிந்து தொலைக்கிறது

ஐயா வாழ்வின் யதார்த்தத்தை எவ்வளவு அழகா அருமையா எளிமையா சொல்லிட்டிங்க.

MARI The Great said...

எளிமையான சொற்களை கொண்டு தொடுக்கப்பட்ட அழகான கவி (TM 7)

ஆத்மா said...

பட்ட பின்புதான் எல்லாம் புரியுமென்பார்கள்....:)

Seeni said...

sariyaa azhakaa sonneenga...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தங்களின் கவிதை முற்றிலும் உண்மை.அவ்வை காலம் கடந்து நிற்பதற்கு எளிமையான புலமையே காரணம்.நல்ல கருத்து.
த.ம 8

இராஜராஜேஸ்வரி said...

இதழ் விரித்த சிறு புன்னகையும்
மனம் திறந்த ஒரு சொல்லும்
போதும் என்பது கூட
உறவும் நட்பும்
உருக்குலைந்த பின்புதான்
புரிந்து தொலைக்கிறது

காலம் கடந்த பின் கிடைக்கும் ஞானம் !

vimalanperali said...

உடலுக்கும்,உறவுகும்,வாழ்க்கைக்கும் கவிதைக்கும் என்றும் எளிமை போதும்,படோடோபம் தேவையில்லை எனபதை மிக எளிமையாக விளக்கிச்சென்ற கவிதை.நன்றாகயிருக்கிறது.வாழ்த்துக்கள்.

சென்னை பித்தன் said...

த.ம..9

எளிமையான சொற்களில் சொல்லப்பட்ட வலிமையான கருத்துகள்.
அருமை ரமணி

தி.தமிழ் இளங்கோ said...

கண் கெட்ட பிறகுதானே நமக்கு சூரிய நமஸ்காரம் தோன்றுகிறது. ” இது போதும்” என்பது இப்போதைக்கு கவிதைக்கு இல்லை!

”தளிர் சுரேஷ்” said...

எளிமையான நடையில் இனிமையான கவிதை! பாராட்டுக்களும் நன்றிகளும்!

குறையொன்றுமில்லை. said...

எளிமையான சொற்களும்
வலுவான நோக்கமுமே

எளிமையான சொற்களில் வலிமையா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள்.

Anonymous said...

''...கவிதை சிறக்கவும்
காலம் வெல்லவும்,
எளிமையான சொற்களும்
வலுவான நோக்கமும்...''

இருந்தாலும் நிறைய விமர்சகர்களும் வேண்டுமே!......
வேதா. இலங்காதிலகம்

Yaathoramani.blogspot.com said...

ராமலக்ஷ்மி//

அருமை.//

தங்கள் முதல் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பால கணேஷ்//

ஆஹா... ரமணி ஸாரின் கருத்துப் பெட்டகத்தில் இருந்து மற்றொரு மணம் வீசும் மலர். அருமை//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப் போகும்
அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மோகன் குமார்

Nice //

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //

ஐயா வாழ்வின் யதார்த்தத்தை எவ்வளவு அழகா அருமையா எளிமையா சொல்லிட்டிங்க.//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப் போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வரலாற்று சுவடுகள் /
/.
எளிமையான சொற்களை கொண்டு தொடுக்கப்பட்ட அழகான கவி//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சிட்டுக்குருவி //

தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni //

sariyaa azhakaa sonneenga...//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN//

தங்களின் கவிதை முற்றிலும் உண்மை.அவ்வை காலம் கடந்து நிற்பதற்கு எளிமையான புலமையே காரணம்.நல்ல கருத்து//.

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப் போகும்
அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //.

காலம் கடந்த பின் கிடைக்கும் ஞானம் !//

தங்கள் உடன் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

விமலன் //

கவிதைக்கும் என்றும் எளிமை போதும்,படோடோபம் தேவையில்லை எனபதை மிக எளிமையாக விளக்கிச்சென்ற கவிதை.நன்றாகயிருக்கிறது.வாழ்த்துக்கள்.//


தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப் போகும்
அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சென்னை பித்தன் //

எளிமையான சொற்களில் சொல்லப்பட்ட வலிமையான கருத்துகள்.அருமை ரமணி//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //
.
கண் கெட்ட பிறகுதானே நமக்கு சூரிய நமஸ்காரம் தோன்றுகிறது. ” இது போதும்” என்பது இப்போதைக்கு கவிதைக்கு இல்லை!//

நிச்சயமாக

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

s suresh //
.
எளிமையான நடையில் இனிமையான கவிதை! பாராட்டுக்களும் நன்றிகளும்//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

எளிமையான சொற்களில் வலிமையா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள்.//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப் போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

கீதமஞ்சரி said...

முதல் பத்தியில் பறிகொடுத்த மனம் மீளத் திரும்பவில்லை. அங்கேயே சுற்றிச் சுற்றி வருகிறது. உண்மையில் கவிதையின் மொத்தக் கருவும் அங்கேயே பிடிபட, பின்வருபவை அதை வழிமொழிபவையாகவே தெரிகின்றன. எத்தனை அற்புதமான கருத்து! வாழ்க்கையின் நாலாவிதப் பிரச்சனைகளுக்கும் தீர்வு உங்கள் கவிதைகள் மூலம் கிடைத்துவிடுகின்றன. மனம் தொட்டகலாத கவிதைக்குப் பாராட்டுகள் ரமணி சார்.

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மையான உண்மை சார் ! நல்ல வரிகள்...நன்றி. வாழ்த்துக்கள். (த.ம. 12)

G.M Balasubramaniam said...

/எளிமையான சொற்களும்
வலுவான நோக்கமுமே
பிரதான மென்பது/ உண்மை. பாராட்டுக்கள்.

ஸ்ரீராம். said...

பல விஷயங்களும் தாண்டிச் சென்ற பின்தான் திரும்பிப் பார்த்து உணர வைக்கின்றன. மறுபடியும், 'அட! ஆமாம்ல' என்று எண்ண வைத்த கவிதை.

சீனு said...

//எளிமையான சொற்களும்
வலுவான நோக்கமுமே
பிரதான மென்பது கூட
ஔவையையும் பாரதியையும்
படித்தறிந்த பின்புதான்
புரியவே துவங்குகிறது//

இறுதியில் நீங்க முடித்த விதம் தான் என்னை மிக மிக கவர்ந்தது


படித்துப் பாருங்கள்

தல போல வருமா (டூ) பில்லா டூ

http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_13.html

கோமதி அரசு said...

போதுமென்ற மனமும்
ஆரோக்கிய உடலும்
போதுமென்பது கூட
ஏழை எளியவர்களின்
முகம் பார்த்தபின்புதான்
மூளைக்கு உறைக்கிறது//

நீங்கள் சொல்வது சரியே!
இது போதும் எல்லாமே நன்றாக இருக்கிறது.
வாழ்க்கைக்கு தேவையானவை.

வெங்கட் நாகராஜ் said...

எளிமையான சிறப்பான கவிதை....

த.ம. 13

மாதேவி said...

கவிதை சிந்திக்க வைக்கின்றது.
எதுவும் பின்னால்தான் உறைக்கும் என்பார்கள்.

அருணா செல்வம் said...

ஐயா.... என்னவென்று பாராட்டுவது
என்றெனக்குத் தெரியவில்லை!

வணங்குகிறேன் ரமணி ஐயா.

raji said...

வலுவான நோக்கத்தின் வார்த்தைகளில் எனக்கு பல கோணங்கள் புரிகிறது

பகிர்விற்கு நன்றி

Yaathoramani.blogspot.com said...

கீதமஞ்சரி //

எத்தனை அற்புதமான கருத்து! வாழ்க்கையின் நாலாவிதப் பிரச்சனைகளுக்கும் தீர்வு உங்கள் கவிதைகள் மூலம் கிடைத்துவிடுகின்றன. மனம் தொட்டகலாத கவிதைக்குப் பாராட்டுகள் ரமணி சார்.//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப் போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப் போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

/எளிமையான சொற்களும்
வலுவான நோக்கமுமே
பிரதான மென்பது/ உண்மை. பாராட்டுக்கள்.//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப் போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம்//

பல விஷயங்களும் தாண்டிச் சென்ற பின்தான் திரும்பிப் பார்த்து உணர வைக்கின்றன. மறுபடியும், 'அட! ஆமாம்ல' என்று எண்ண வைத்த கவிதை.//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப் போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சீனு //.


இறுதியில் நீங்க முடித்த விதம் தான் என்னை மிக மிக கவர்ந்தது//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப் போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு //

நீங்கள் சொல்வது சரியே!
இது போதும் எல்லாமே நன்றாக இருக்கிறது.
வாழ்க்கைக்கு தேவையானவை.//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப் போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

எளிமையான சிறப்பான கவிதை..//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப் போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாதேவி //
.
கவிதை சிந்திக்க வைக்கின்றது.
எதுவும் பின்னால்தான் உறைக்கும் என்பார்கள்//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப் போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

AROUNA SELVAME //

ஐயா.... என்னவென்று பாராட்டுவது
என்றெனக்குத் தெரியவில்லை!//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப் போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

raji//

வலுவான நோக்கத்தின் வார்த்தைகளில் எனக்கு பல கோணங்கள் புரிகிறது
பகிர்விற்கு நன்றி//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப் போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

முனைவர் இரா.குணசீலன் said...

ஆனந்த வாழ்வுக்கும்
அமைதியான மனதிற்கும்
வங்கிக் கணக்கில் இருப்பும்
வகைதொகையில்லாச் சொத்தும்
என்றேன்றும் தேவையில்லை

அழகாகச் சொன்னீர்கள் அன்பரே.

Yaathoramani.blogspot.com said...

முனைவர்.இரா.குணசீலன் //

அழகாகச் சொன்னீர்கள் அன்பரே.//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப் போகும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Athisaya said...

வணதோ அனுபவமோ எது என்று தெரியவில்லை..அத்தனை இயல்பாயும் பொருட்செறிவாகவும் எழுதுகிறீர்கள்இவாழ்த்துக்கள் ஐயா!

ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!

Yaathoramani.blogspot.com said...

Athisaya //

வணதோ அனுபவமோ எது என்று தெரியவில்லை..அத்தனை இயல்பாயும் பொருட்செறிவாகவும் எழுதுகிறீர்கள்இவாழ்த்துக்கள் ஐயா!//

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

CS. Mohan Kumar said...

தமிழ் மண நட்சத்திரத்துக்கு மனம் திறந்த வாழ்த்துகள். இந்த வாரம் அடித்து ஆடி அசத்துங்கள் !

முனைவர் இரா.குணசீலன் said...

தமிழ்மண நட்சத்திரப் பதிவருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் அன்பரே.

Yaathoramani.blogspot.com said...

மோகன் குமார் //

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

முனைவர்.இரா.குணசீலன்//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

அருமை!

Yaathoramani.blogspot.com said...

kari kalan //

அருமை!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment