Sunday, December 11, 2011

சிரிப்பின் பலமறிவோம்

சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே

வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மனிதம் பூக்குமே

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே-இந்த
உலகே உண்மை சொர்க்க மென்று
புரிய லாகுமே

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்

104 comments:

பால கணேஷ் said...

சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே சொந்தமான கை இருப்புன்னு கலைவாணர் சொன்ன சிரிப்பல்லவா? ‌வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டு்ல போகும்? சிரிச்சா என்ன செலவா ஆகும்! அருமையான வரிகளை அழகுறத் தந்திருக்கிறீர்கள். மிகவும் ரசித்தேன்.

சசிகுமார் said...

அருமை....

செல்ல நாய்க்குட்டி மனசு said...

உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்//
செய்திடுவோம். அதுக்கு முதல்ல நமக்கு சிரிக்கத் தெரியணுமே ? நல்ல கவிதை ஐயா

Riyas said...

அழகான கவிதை

இராஜராஜேஸ்வரி said...

குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே-அந்த
அழகை உணர துன்பம் எல்லாம்
அழிந்து ஒழியுமே

பூவாய் மலர்ந்து சிரித்து மண்ம் பரப்பி
மனம் நிறைந்த பகிர்வு.. பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..

ADHI VENKAT said...

//இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்//

அருமையான கருத்து.
அழகான கவிதை.
த.ம - 5

Unknown said...

// விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்//


சகோ!
பாடல் முழுவதும் அருமை!
அதிலும் மேலே உள்ள வரிகள் தங்கத்தில் பொதிந்த
வைரம் போல் மின்னுகின்றன!
த ம ஒ 5

புலவர் சா இராமாநுசம்

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.

G.M.Balasubramaniam said...

A hearty laughter can throw the pains a mile away. A neat presentation, sir.

குறையொன்றுமில்லை. said...

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்


அழகான ரசனை மிக்க வரிகள்.

M.R said...

எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே


அழகான வார்த்தைகள் கொண்டு அருமையான அர்த்தம் தரும் பாடல் அருமை நண்பரே

தமிழ்மணம் 9

தமிழ் உதயம் said...

அர்த்தம் தரும் அருமையான பாடல்...வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

கணேஷ்

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சசிகுமார் //

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

rufina rajkumar //

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Riyas //

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Madhavan Srinivasagopalan said...

//இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்//

oh! Fantastic..

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Rathnavel //

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M.Balasubramaniam //

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

M.R //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தமிழ் உதயம் //

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்

Yaathoramani.blogspot.com said...

Madhavan Srinivasagopalan //


தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

Yaathoramani.blogspot.com said...

நண்டு @நொரண்டு -ஈரோடு //

தங்கள் உடன் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

அப்பாதுரை said...

சிரிப்பைப் போற்றுதும், சிரிப்பைப் போற்றுதும். நல்ல கவிதை ரமணி. 'இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே' வரிகளில் நானும் விழுந்தேன். எழுந்திருக்க மனம் வரவில்லை இன்னும்.

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வளர்ந்த நிலவு வானில் இருந்து
மெல்லச் சிரிக்குமே-அதன்
அழகு சிரிப்பில் மயங்கி மலரும்
மணந்து சிரிக்குமே-அதன்
மணத்தில் மயங்கி சோலை யெல்லாம்
சொர்க்க மாகுமே-அந்த
உணர்வை உணர்ந்த மனிதர் மனத்தில்
மனிதம் பூக்குமே//

பூவாய் மலர்ந்து சிரித்து மணம் பரப்பும்
மனம் நிறைந்த பகிர்வு.

வெகு அழகான கவிதை! பாராட்டுக்கள்.

தமிழ்மணம்: 12 vgk

MANO நாஞ்சில் மனோ said...

அன்பு தணிந்த இந்த உலகில் சிரிப்பும் இல்லாமல் போய் விட்டது ஆச்சர்யம்தான்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

அன்று வீட்டுத்திண்ணையில் அமர்ந்து அளவளாவி சிரித்து மகிழ்ந்த மனிதன், இன்றைக்கு உணர்வில்லாதவனாக டிவி முன்பு அமர்ந்து இருக்கிறான்...!!!

shanmugavel said...

//குழந்தை மனதில் தெய்வம் இருந்து
சிரிப்பைத் துவங்குமே-அது
குழந்தை இதழில் மெல்ல வழிந்து
இல்லம் நிறைக்குமே//

மனம் கவர்ந்தவரிகள்.நன்று

ஸாதிகா said...

விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்///

அடடா..என்ன அருமையான வரிகள்.ஒவ்வொரு கருவையும் கையில் எடுத்துக்கொண்டால் பின்னி பெடல் எடுக்கின்றீர்கள் சார் கவிதை வரிகளில்..வாழ்த்துக்கள்.

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!

//இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம் //

புகைப்படக் கலைஞர்கள் இனிமேல் “ஸ்மைல் ப்ளீஸ்” என்று சொல்ல வேண்டியதில்லை. தங்கள் கவிதையின் மையக் கருவே இந்த வரிகள்தான். வளரட்டும் தங்கள் தமிழ்ப் பணி.

ananthu said...

சிரிப்பதற்கு ஏன் கஞ்சத்தனம் ...? சிரிப்போம் , உயர்வோம்...பகிர்வுக்கு நன்றி ...!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இதழ்கள் பற்றிய தங்கள் வர்ணனையில் தேனில் விழுந்த ஈ போல நானும் வீழ்ந்து கிடக்கிறேன்..அதுவும் வெகு சுகமாக...


அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

SURYAJEEVA said...

இழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்று இருப்பவன் தான் சிரிக்கிறான்... அது அவன் சுய கவலையை மறக்கவா? தெரியவில்லை..

Yaathoramani.blogspot.com said...

MANO நாஞ்சில் மனோ //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

shanmugavel //

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ananthu //

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

suryajeeva //

தங்கள் வரவுக்கும் சிந்திக்கத் தூண்டும்
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

ஹேமா said...

சிரித்து வாழ்வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே ஞாபகம் வருகிறது.கள்ளமில்லாச் சிரிப்போடு வாழ்வோம்.நல்ல வரிகள் எப்போதும்போல !

சி.பி.செந்தில்குமார் said...

ஹா....ஹா...சிரிப்பு சிரிப்பு....எனக்கு பிடித்த விடயம்.

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சி.பி.செந்தில்குமார் //

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

கே. பி. ஜனா... said...

//இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-//
படிக்கும்போதே உணர்ந்து புன்னகை தோன்றவைக்கிற வரி!

Yaathoramani.blogspot.com said...

கே. பி. ஜனா... //

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

raji said...

//விழிகள் இரண்டும் காண வென்றே
அறிந்தி ருக்கிறோம்-கொண்ட
செவிகள் இரண்டும் கேட்க வென்றே
புரிந்தி ருக்கிறோம்-இனி
இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்//

உங்கள் விரல்கள் ஐந்தும் எழுதவென்றே
தெரிந்திருக்கிறோம்-கொண்ட
எழுதுகலன் சிந்தனை மட்டுமன்றி
சிரிப்பும் கற்றுத் தர
தெளிந்திருக்கிறோம்

அருமையான பதிவு.பகிர்விற்கு நன்றி

சுதா SJ said...

ரெம்ப அழகா பாடல்கள் எழுதுறீங்க பாஸ்...... ;)

பனித்துளி சங்கர் said...

ஆஹா எத்தனை நேர்த்தியான உணர்வுகள் அற்புதம் . வாழ்த்துக்கள்

kowsy said...

இதழ்கள் இருப்பது சிரிப்பதற்கென்றே புரிந்துகொள்ளும் படியாக புனைந்த கவிதை. மிருகங்களும் சிரிக்கும் அதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் எமக்கு இல்லை. சிரிப்பின் மகத்துவம் உணர்த்தினீர்கள். அதைத் தெரிந்தும் ஏன் சில மனிதர்கள் முகத்தில் வரட்சியைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் தெரிவதில்லை. காசு கொடுத்தான் சிரிப்பை வாங்க முடியாது இருக்கும். இவர்களுக்கு உங்கள் கவிதை சிந்திக்க வரி தந்திருக்கின்றது .

Yaathoramani.blogspot.com said...

raji //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

துஷ்யந்தன் //

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! //

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சந்திரகௌரி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

RVS said...

சிரிக்காத இதழ்கள் இருந்தென்ன லாபம்...


அபாரமான கவிதை! :-)

Yaathoramani.blogspot.com said...

RVS //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Avargal Unmaigal said...

நன்றாக இருக்கிறது. சிரிப்பின் பலமறிய உங்களின் எழுத்தின் பலம் தமிழனுக்கு தேவைபடுகிறது. வாழ்த்துக்கள்

சசிகுமார் said...

இணையத்தில் உங்கள் ஆதரவை தெரிவிக்க:
நண்பர்களே நாம் ஒன்று பட வேண்டிய காலம் வந்து விட்டது. தமிழர்களுக்கு என்ன ஆனால் எங்களுக்கு என்ன என்று குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கும் மத்திய அரசின் காதுகளில் இந்த பிரச்சினையை கொண்டு செல்ல உங்களின் ஆதரவை தாருங்கள். கீழே உள்ள லிங்கில் சென்று படிவத்தில் கையெழுத்திட்டு இணையத்தில் உங்கள் ஆதரவை தாருங்கள். மதி கெட்டு நடந்து கொள்ளும் மலையாளிகளின் ஆணவத்தை அடக்குவோம்.

http://www.change.org/petitions/central-government-of-india

நண்பர்களே உங்கள் நண்பர்களுக்கும் இந்த செய்தியை பகிர்ந்து தினம் பாதிக்கப்பட்டிருக்கும் நம் சகோதரர்களை காப்பாற்றுவோம்.

ராஜி said...

விலங்குளிலிருந்து நம்மை வேறுபடுத்தி காட்டும் சிரிப்பின் அருமை பற்றி அழகான கவிதை. பகிர்விற்கு நன்றி ஐயா!

ராஜி said...

த ம 18

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராஜி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சசிகுமார் //

தங்கள் வரவுக்கு மனமார்ந்த நன்றி

கீதமஞ்சரி said...

கள்ளமில்லாக் குழந்தையின் சிரிப்பாய்க் கவர்ந்திழுக்கும் கவிதை. இறுக்கம் தளர்த்தி இதம் தரும் மென்புன்னகைப் பரிமாற்றம் கூட நிகழ்வதில்லை குடும்பத்தினரிடையே. சிரிப்பின் மகத்துவம் உணர்த்தும் அழகுக் கவிதையாக்கத்துக்குப் பாராட்டுகள் ரமணி சார்.

RAMA RAVI (RAMVI) said...

சிரிப்பின் சிறப்பை உணர்த்தும் மிக அழகான கவிதை.உலகத்தில் உள்ள எந்த ஒரு ஜீவராசிகளிடமும் இல்லாத உணர்வு மனிதனிடம்தான் இருக்கிறது.அதனால் கட்டாயம் சிரிக்க வேண்டும்.

வாய்விட்டு சிரித்தால் நேய்விட்டுப்போகும் என்று பெரியவர்கள் தெரியாமாலா சொல்லிவைத்திருக்கிரார்கள்??

அருமை.

Yaathoramani.blogspot.com said...

கீதா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

RAMVI //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ஹ ர ணி said...

புன்னகைதான் வாழ்க்கை. உயிர்த்திருத்தல். சிரிக்காதவன் பிணமே. அருமையான சொற்கோர்ப்பில் புன்னகைத்த கவிதை.

மகேந்திரன் said...

ஏழிசை பிறந்ததெல்லாம்
சிரிப்பின் சந்தத்தால் என
யாரோ ஒரு கவிஞன் சொன்னது ஞாபகம் வருகிறது..

சிரிப்பின் வலிமையை
ஆழமாய் சொல்லும் பதிவு மிக அருமை நண்பரே.

Yaathoramani.blogspot.com said...

ஹ ர ணி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

அண்ணே சிரிப்பு மிகப்பெரிய சொத்தாய்சேன்னே..சரியா சொன்னீங்க!

ஸ்ரீராம். said...

சிரிப்பும் புன்னகையும் மனிதனுக்கு தெய்வம் தந்த கொடை. சிரிப்பும் புன்னகையும்தான் எளிதில் தொற்றிக் கொள்ளும், ஆனால் எல்லோராலும் விரும்பப் படும் தொற்று நோய்....

துரைடேனியல் said...

Sir,
Migavum arumai. Thodara Vaalthukkal.

Tamilmanam Vote 21.

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //

தங்கள் வரவுக்கு மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

விக்கியுலகம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மனிதன் மட்டுமே அழ விரும்புகிறான். கடவுள் அவன் அழுகையைச் சமன் செய்யக் கொடுத்த அற்புதமான கொடை சிரிப்பு.

மிருகங்களும் தாவரங்களும் சிரிக்கின்றன.அது நம் சிரிப்பைப் போன்றதல்ல.அவை மனதால் சிரிக்கின்றன.அதை உணர்வது எல்லோருக்கும் சாத்தியமில்லை.

ஆனால் உணர்வின் பாற்பட்டு அவை ஒருபோதும் அழுவதில்லை.உடல்வலி மட்டுமே அவற்றின் அபூர்வமான கண்ணீரை வெளிப்படுத்துகின்றன.

தாவரங்களோ அழுவது அவற்றின் மனதால் மட்டுமே. வெட்டப்பட்ட மரங்களிலும் பிய்த்தெறியப் பட்ட இலைதழைகளிலும் அவற்றின் கண்ணீர் மறைந்திருக்கின்றன.

arasan said...

நெஞ்சை கொள்ளை கொள்ளும் பதிவு....
சிரிப்பின் அவசியம் சிறப்பா சொன்ன விதம் புதுமை ..
வாழ்த்துக்கள் சார்

Anonymous said...

''..சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்-இதை
உலகு அறியச் சொல்லி நாமும்
உயர்வு கொள்ளுவோம்..'''
இதை மறந்து தானே பலர் வேதனை அனுபவிக்கின்றனர். மறக்காமல் இருப்போம். வாழ்த்துகள் சகோதரா.(சில பார்க்கத் தவறியவைகளுக்கும் கருத்திட்டுள்ளேன்)
வேதா. இலங்காதிலகம்.
http://www,kovaikkavi.wordpress.com

Yaathoramani.blogspot.com said...

சுந்தர்ஜி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அரசன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான கவிதை!
பகிர்விற்கு நன்றி Sir!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

vanathy said...

சூப்பர் கவிதை. குழந்தைகளின் சிரிப்புக்கு இணை ஏது?

Yaathoramani.blogspot.com said...

vanathy //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

அன்புடன் நான் said...

நல்ல தத்துவக் கவிதை.... பாராட்டுக்கள்.

Yaathoramani.blogspot.com said...

சி.கருணாகரசு //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

சிவகுமாரன் said...

\\இதழ்கள் இரண்டும் சிரிக்க வென்றே
உணர்ந்து கொள்ளுவோம்

வாய் இருப்பது வம்பு பேசத்தான் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்,

துள்ளலான நடை.
அருமையான கவிதை.

Yaathoramani.blogspot.com said...

சிவகுமாரன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Admin said...

அற்புதமான கவிதை படித்த உணர்வு ஏற்பட்டது..

Yaathoramani.blogspot.com said...

மதுமதி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

r.v.saravanan said...

சிரிக்கத் தெரிந்த பிறவி உலகில்
மனிதப் பிறவியே-இதை
அறிந்தும் இங்கு சிரிக்க மறுத்தல்
பெரிய கொடுமையே
இதழ்கள் வலிக்கச் சிரித்து விட்டால்
இன்பம் இன்பமே-எதையும்
இதயம் தன்னில் மூடி வைத்தால்
என்றும் துன்பமே


வரிகள் அருமை

Yaathoramani.blogspot.com said...

r.v.saravanan //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

radhakrishnan said...

''இதழ்கள் இரண்டும் சிரிக்கவென்றே உணர்ந்து
'கொள்ளுவோம்''
அட்டா, இதை உணர்ந்தால் சிரிப்பைத் தொலைப்போமா
சிடுமூஞ்சிகளுக்கு சரியான சவக்கடி
இனியகவிதைக்கு நன்றி சார்

Yaathoramani.blogspot.com said...

radhakrishnan //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Post a Comment