Friday, March 25, 2011

நீரோடு செல்கின்ற ஓடம்

நல்ல படிப்பு
நல்ல வேலை
என்னை
ஊரைவிட்டும்
உறவைவிட்டும்
பிரித்துப் போடும்

சம்பளத்தொகையே
என் இல்லத்திற்கும்
என் அலுவலகத்திற்க்கான
இடைவெளியை
நிர்ண்யித்துப் போகும்

வீட்டுக்கடன்
பிடித்தத் தொகையே
எனக்கான
சம்பாதிக்கும் பெண்ணை
முடிவு செய்துப்போகும்

யாரை அழைத்துக் கொள்வது
அல்லது
யாரிடம் பராமரிக்க அனுப்புவது
என்கின்ற தீர்மானமே
நான் தகப்பனாவதை
நிர்ணயிக்கும் காரணியாகிப் போகும்

திங்கள் காலை முதல்
வெள்ளி மாலைவரை
என் உணர்வுகளும்
என் செயல்களும்
அலுவலக திசை நோக்கியே நீளும்
இல்லம் கூட
அலுவலகம் போல வேகும்

அவசியப் பேச்சுக்கே
நேரமில்லை என்பதால்
எங்களுக்கான
அன்னியோன்னிய பேச்சுக்கள்
அடியோடு நசுங்கிப்போகும்

மறுவார தயாரிப்புக்கு
சனிக்கிழமை பலியாகும்
நாவுக்கு ருசிகாட்டவோ
உடலுக்கு சுருதி கூட்டவோ
ஞாயிறு ஒதுக்கீடாகிப்போகும்

என் இஷ்டப்படி எதுதான் நடந்தது என
அவ்வபோது முனங்கி
தொடர் ஓட்டத்தின்
துயர் தாங்காது
மன இறுக்கத்தின்
வலி பொறுக்காது
குறிப்பிட்ட கால இடைவெளியில்
என்னைக்
கடித்துக் குதறி சின்னா பின்னமாக்கி
தன் துயர் குைற்க்க முயன்று
தோற்று வீழ்வாள் துணை

என் இஷ்டபடியும்
இதுவரை எதுதான் நடந்தது
என்பதை விளக்கிச் சொல்லி
அவளுக்கு ஆறுதல் சொல்லி
நானும் ஆறுதல் பெறலாம் என
எத்தெனிக்கையில்
கடந்தகால இழப்புகளும்
எதிர்கால கவலைகளும்
நிகழ்கால பொறுப்புகளும்
என்னை
கையாலாகாதவன் ஆக்கிப்போகும்

இத்தனைக்கும் இடையில்......

ஆற்றங்கரையோரம்
வியாபாரத்திற்க்காக
பரப்பி வைக்கப்பட்ட மீன்கள் மேல்
சாகாதிருப்பதற்க்காக
அவ்வப்போது தெளிக்கப்படும்
துளி நீர் போல
உயிர் நீர் போல

"மின்னோடு வானம் தண் துளி தலை இ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணைபோல் ஆர் உயிர்
முறை வழிபடூஉம்..."என்ற
பூங்குன்றனின் அருள்வாக்கு
அவ்வப்போது ஆறுதல் சொல்லிப் போகும்

23 comments:

அகலிக‌ன் said...

"ஆற்றங்கரையோரம்
வியாபாரத்திற்க்காக
பரப்பி வைக்கப்பட்ட மீன்கள் மேல்
சாகாதிருப்பதற்க்காக
அவ்வப்போது தெளிக்கப்படும்
துளி நீர் போல
உயிர் நீர் போல"

நல்ல உவமை! தங்கள் பர‌ந்த பார்வையின் தெளிந்த
வார்த்தைகள் பட்டு தெரிக்கிறது கவிதை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தம்பதி இருவரும் உத்யோகம் பார்ப்பதால் ஏற்படும் பல்வேறு சங்கடங்களை, மன ஓட்டங்களையும், வலிகளையும், துயர்களையும், உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் வரிக்குவரி, வழக்கம்போலவே, வெகு அழகாகச் சொல்லிப்போய் இருக்கிறீர்கள்.

இருவர் சம்பளமும் வீட்டுக்கு வரும் நாள் தான் இவற்றிற்கெல்லாம், சற்றே வடிகாலாக அமையுமோ!
எனக்கு அதுபற்றித் தெளிவாகத்தெரியும் பாக்யம் கூட இல்லை.

தொடரட்டும் உங்கள் கவிதைகள்.

பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். அன்புடன் vgk

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இத்தனைக்கும் இடையில்......

ஆற்றங்கரையோரம்
வியாபாரத்திற்க்காக
பரப்பி வைக்கப்பட்ட மீன்கள் மேல்
சாகாதிருப்பதற்க்காக
அவ்வப்போது தெளிக்கப்படும்
துளி நீர் போல
உயிர் நீர் போல//

நல்ல அருமையான, பொருத்தமான ஒரு உதாரணம்.
பாரட்டுக்கள்.

R. Gopi said...

இதைப் பத்தி ஒரு கட்டுரை எழுதலாம்னு எண்ணம் இருக்கு. இந்தக் கவிதையைப் பார்த்ததும் அதை விரைவில் எழுத வேண்டும் என்று தோன்றுகிறது

MANO நாஞ்சில் மனோ said...

//தொடர் ஓட்டத்தின்
துயர் தாங்காது
மன இறுக்கத்தின்
வலி பொறுக்காது
குறிப்பிட்ட கால இடைவெளியில்
என்னைக்
கடித்துக் குதறி சின்னா பின்னமாக்கி
தன் துயர் குைற்க்க முயன்று
தோற்று வீழ்வாள் துணை//

மனசுக்குள் ஒரு மாதிரியா வலிக்குதே குரு....

raji said...

கட்டாய தொடர் ஓட்டத்தின் வலி நன்றாக
வெளிப்பட்டிருக்கின்றது

ஆற்றங்கரையோரத்து வியாபார மீன் உவமை அருமை

செல்ல நாய்க்குட்டி மனசு said...

எங்களுக்கான
அன்னியோன்னிய பேச்சுக்கள்
அடியோடு நசுங்கிப்போகும்//
அன்னியோன்னிய பேச்சா? அப்படின்னா?
காரியவாதம் தலை தூக்கி நிற்கும் காலம் இது .

Chitra said...

ஆற்றங்கரையோரம்
வியாபாரத்திற்க்காக
பரப்பி வைக்கப்பட்ட மீன்கள் மேல்
சாகாதிருப்பதற்க்காக
அவ்வப்போது தெளிக்கப்படும்
துளி நீர் போல
உயிர் நீர் போல



.......WOW!!! இந்த கவிதையில் வெளிப்படுத்தப்படும் சராசரி மனிதரின் வலிகள் ....வாழ்க்கை நிலை..... இந்த உவமையில் கொடி கட்டி பறக்குது. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

ம.தி.சுதா said...

////மறுவார தயாரிப்புக்கு
சனிக்கிழமை பலியாகும்////

யதார்த்தத்தை விளம்பியுள்ளிர்கள்.. அதுவும் அருமையான வரிக் கோர்ப்பால் நன்றி நன்றி...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

goma said...

பல கோணத்திலும் சிந்தனையை பயணிக்க வைத்துத் தேடி எடுத்த எண்ணப்புதையல்

vanathy said...

ரமணி அண்ணா, வழக்கம் போலவே உங்கள் அருமையான கவிதை. பணம் என்பது இன்றியமையாத தேவையாக இருக்கும் போது இதெல்லாம் சகஜமாகி விடும்.

Sriakila said...

யதார்த்தமான மனநிலையை அருமையான வார்த்தைகளில் கோர்த்திருக்கிறீர்கள். புரிந்து கொள்ள முடிகிறது..

கிருஷ்ணப்ரியா said...

தீர்வு என்ன என்றே அறிய முடியாத ஒரு சிக்கலான கணக்காய் வாழ்க்கை மாறிக் கொண்டிருக்கிறது இப்போதெல்லாம். உங்கள் கவிதை அதை மிக அழகாக படம் பிடித்து காட்டுகிறது....

Unknown said...

//மறுவார தயாரிப்புக்கு
சனிக்கிழமை பலியாகும்//

மிகவும் எதார்த்தமான கவிதை!

RVS said...

//ஆற்றங்கரையோரம்
வியாபாரத்திற்க்காக
பரப்பி வைக்கப்பட்ட மீன்கள் மேல்
சாகாதிருப்பதற்க்காக
அவ்வப்போது தெளிக்கப்படும்
துளி நீர் போல
உயிர் நீர் போல/

இதை எல்லோரும் சொல்லிட்டாங்க... அதுக்காக நான் சொல்லாமல் போக முடியுமா? அட்டகாசமா இருக்குது. வாழ்வின் தொடர் ஓட்டத்தை பற்றி அருமையா எழுதியிருக்கீங்க. கடைசியில் கலியன் பூங்குன்றனை துணைக்கு அழித்து முத்தாய்ப்பா முடிச்சீங்க.. அற்புதம். ;-)

சிவரதி said...

ஆற்றங்கரையோரம்
வியாபாரத்திற்க்காக
பரப்பி வைக்கப்பட்ட மீன்கள் மேல்
சாகாதிருப்பதற்க்காக
அவ்வப்போது தெளிக்கப்படும்
துளி நீர் போல
உயிர் நீர் போல
ஆம், உண்மைதான்
நீர்வற்றின் நிலை என்னாகும்....

ஹேமா said...

இதுதான் இன்றைய வாழ்வியல்.ஆனால் அன்று இல்லை.பொருளாதரம் தேடுவதால்தானே இத்தனையும்.ஆசைகளைக் குறைத்தால் ஓரளவு இந்தக் கவிதையின் தாக்கமும் குறையும் !

சாந்தி மாரியப்பன் said...

ஒருத்தர் முகத்தை இன்னொருத்தர் பாக்கக்கூட நேரமில்லாம ஓடிக்கிட்டிருக்கற கொடுமையும், பெற்ற குழந்தையை கொஞ்சக்கூட ஞாயிற்றுக்கிழமையை ஒதுக்கும் அவலமும் நடந்துக்கிட்டிருக்கறது கண்முன்னால வந்துபோகுது :-(

மனோ சாமிநாதன் said...

"அவசியப் பேச்சுக்கே
நேரமில்லை என்பதால்
எங்களுக்கான
அன்னியோன்னிய பேச்சுக்கள்
அடியோடு நசுங்கிப்போகும்"

எல்லாமே வேகமாய், தேடுதலாய், இயந்திரகதியாய் ஆகிப்போன நிகழ்காலத்தில், அடி மனதின் புலம்பல்களை, தவிப்புகளை ஆற்றாமையுடன் சொல்லும் இந்த வரிகள் உன்மையிலேயே சத்திய வார்த்தைகள்!
மறுபடியும் ஒரு அர்த்தம் பொதிந்த, அருமையான கவிதை!!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நிதர்சனம் பேசும் கவி.... வாழ்வியல் உவமை எழுத்தோடு ஒன்ற செய்தது... நல்ல பதிவுங்க

jothi said...

**"ஆற்றங்கரையோரம்
வியாபாரத்திற்க்காக
பரப்பி வைக்கப்பட்ட மீன்கள் மேல்
சாகாதிருப்பதற்க்காக
அவ்வப்போது தெளிக்கப்படும்
துளி நீர் போல
உயிர் நீர் போல"

நல்ல உவமை! தங்கள் பர‌ந்த பார்வையின் தெளிந்த
வார்த்தைகள் பட்டு தெரிக்கிறது கவிதை. **

முழுக்க‌ வ‌ழிமொழிகிறேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புள்ள கவிஞர் ஐயா,
நான் இன்று “தொந்தி” பற்றி மிகச்சிறிய யாதோ எழுதியிருக்கிறேன். தங்கள் கருத்தை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.
தங்கள் அன்புள்ள,
வை கோபாலகிருஷ்ணன் gopu1949.blogspot.com

மோகன்ஜி said...

இன்றைய இயந்திர கதியாகிப்போன வாழ்வியலை கவிதை அற்புதமாய் வெளிப்படுத்துகிறது ரமணி சார்.
வேலைக்குப் போகும் தம்பதிகளின் தேசிய கீதமிது. அருமை! அருமை!!

Post a Comment